இயேசு உன்னை நேசிக்கிறார்
“என்னை நேசிக்க யார் இருக்கிறார்கள்? இந்த உலகத்தில் உண்மையாய் அன்பு காட்ட யாருமில்லையே!” என்று உன் உள்ளம் அன்புக்காக ஏங்குகிறதல்லவா?
“என் கணவர் என்னை நேசிப்பதில்லை, என் மனைவி என்னை மதிப்பதில்லை, என் பிள்ளைகள் என்னை கவனிப்பதில்லை. பெற்றோரும் எனக்காக கவலைப்படுவதில்லை. எனக்காக இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்? என்று உன் உள்ளம் கலங்குகிறதல்லவா?”
நன்பனே, நீ கலங்காதே!.
இயேசு உன்னை நேசிக்கிறார்.
ஆம், நீ யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்திருந்தாலும், இயேசு உன்னை நேசிக்கிறார்.
»»