“ஒரிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பட்டணத்தின் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்த எனக்கு 5 பெண் பிள்ளைகள்.. அத்தனை பேரையும் உயர் கல்வி படிக்க வைத்தோம்.. ஓய்வு பெறுவதற்க்கு முன்பாக 4 பிள்ளைகளுக்கும் நல்ல வரன்கள் அமைந்தது.. மிக தடபுடலாக திருமணத்தை முடித்தோம்.. என் கடைசி மகள் எங்களுக்கு செல்லப் பிள்ளை.. 4 அக்காமார்களுக்கும் செல்லப் பிள்ளை.. அவர்கள் கணவன்மார்களுக்கும் செல்லப்பிள்ளைதான்..
எனது மூத்த மருமகன் ஓர் பிரசித்தி பெற்ற மருத்துவக் கல்லூரியில் M.D.முடித்து பணியிலிருக்கிறார்.. என் கடைசி மகள். கண்மணி. எப்படியோ ‘மருத்துவராக வேண்டும்’ என்ற ஆசையில் இரவு பகலாக படித்து அதே கல்லூரியி;ல் MBBS seat வாங்கி விட்டாள்.. எங்கள் எல்லோருக்கும் அதிக மகி;ழ்ச்சி. அதிலும் மூத்த மருமகனுக்கு கூடுதல் மகிழ்ச்சி.
சில வேளைகளில் என் மகள் கண்மணியை அவரே கூட்டிக்கொண்டு கல்லூரி செல்வார்.. வீடு திரும்பும்போதும் அவரே கொண்டுவந்து விட்டுச்செல்வார்.. ‘ஓர் மூத்த மகனைப் போல கண்மணியை கவனித்துக் கொள்கிறாரே’ என்று எங்கள் எல்லோருக்கும் அதிக மகிழ்ச்சி..
6 ஆண்டுகள் வேகமாய் ஓடி விட்டது.. கண்மணி மருத்துவராகிவிட்டாள்.. அதே ஆண்டு பிரசித்தி பெற்ற கல்லூரி ஒன்றில் Doctrate முடித்து பணிபுரியும் கமலேஷ்க்கு திருமணம் மிக நேர்த்தியாக நடைபெற்றது. ‘கொடுத்துவைத்த கடைசி பிள்ளை’ என்று எல்லோரும் பாராட்டிச் சென்றனர்..
பத்தே நாளில் என் மகள் கண்மணியின் வாழ்க்கையில் புயல் அடிக்க ஆரம்பித்தது.. திருமணமான முதல் வாரத்தில். கண்மணி தன் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டிய ஒரு வேலை நிமித்தம்.. தன் கணவரிடம் கேட்க மறந்து. முன்போல் தன் மூத்த அக்கா கணவரோடு அவரது காரில் சென்று வந்துவிட்டாள்.. இதனை தூரத்திலிருந்து பார்த்த கமலேஷ், ஆத்திரமடைந்து கண்மணியை சந்தேக வார்த்தைகளினால் திட்ட ஆரம்பித்துவிட்டார்..
இன்று. கண்மணிக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிவிட்டது.. இரண்டு பேருக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாது.. உறவு கிடையாது.. அன்போ, அரவணைப்போ, அமைதியோ இல்லாத குடும்பமாய் மாறிவிட்டது.. எந்த நேரம் எது நடக்குமோ எங்களுக்கு பயமாக இருக்கிறது.. இனி உங்கள் மகள் கண்மணியோடு நான் வாழ மாட்டேன் என்றும் சொல்லிவிட்டார் கமலேஷ்..
என் மகளுக்கு இப்படி ஓர் வாழ்க்கையா?? அப்படி என்ன தப்பு செய்துவிட்டாள் என் மகள் கண்மணி?? இதனை எப்படி சரி செய்ய?? எங்களுக்கு தெரியவில்லையே??
கண்ணீரோடும் தவிக்கும் தகப்பனார்
Prof. Rajesh Sahu. Buvaneshwar
( மேலே உள்ள பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)