Home
Family
Walking With God
Prayer Requests
Songs
 
Prayer Request 

கிருபை பெற்ற குடும்பம்! ? (பாகம் : 1)
அன்பு ஒளி
Reaching out people

ஆதியாகம் 6:8 –யில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது. “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது”.

அன்பு பெற்றோரே! வாலிபரே, உங்களையும் கர்த்தர் இந்த வசனத்திற்கு சொந்தமாக்கி ஆசீர்வதிக்க எண்ணுகிறார். எதிர்பார்ப்போடும், ‘கீழ்ப்படிவேன்’ என்ற எண்ணத்தோடும் இந்த சிறிய செய்தியை வாசிப்போமா?

1. மூதாதையர் தேவனை அறிந்திருந்தது கிருபையே!

நோவாவுடைய மூதாதையரில் ஒருவர் ஏனோக்கு. ஏனோக்கு, 300 வருடம் சஞ்சரித்துக் கொண்டிருந்தது குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த போது காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டார். ஏனோக்கு என்றால் ‘அர்ப்பணிப்பு’ என்று அர்த்தம். அவனுடைய குமாரன் மெத்தூசலா. மெத்தூசலா வாழ்ந்த ஆண்டுகள் 969 வருடம். மெத்தூசலா தன் குமாரனுக்கு ‘லாமேக்’ என்று பெயரிட்டான். ‘லாமேக்’  என்றால் ‘அழிவு வரும்’ என்று அர்த்தம். ‘அவன் மரிக்கும்போது அழிவு வரும்’ என்ற தீர்க்கத்தரிசனம் நிறைவேறிற்று. எத்தனையான தீர்க்கதரிசியாக இருந்திருக்கிறார் மெத்தூசலா. லாமேக் தன் குமாரனுக்கு ‘நோவா’ என்று பெயரிட்டான். நோவா என்றால் ‘இளைப்பாறுதல்’ என்று அர்த்தம். இந்த 4 மூதாதையர்களும் தேவனோடு நெருங்கி பழகினவர்கள். தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்படுத்த விழைந்தவர்கள் வாழ்ந்தும் காட்டி இருக்கிறார்கள்.

நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஜீவனுள்ள தெய்வத்தை அறிந்திருப்பதும், அவரை நேசிப்பதும், தேவனுக்காக உழைப்பதும் நமக்குக் கிடைத்துள்ள ஒரு உன்னத கிருபையே!

தேவனை நேசித்த உங்கள் மூதாதையர்கள் உயிரோடிருந்தாலும், மரித்திருந்தாலும, அடிக்கடி அவர்களுக்காக தேவனைத் துதியுங்கள். அவர்களின் அர்ப்பணிப்புகள் உங்களுக்கு ஆசீர்வாதம். நம்

“நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு  ஆதரவாயிருப்பேன்….”- (2 இரா. 19:34)

தேவன் ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ் செய்கிறவர். “நான் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன்” (யாத் 3:15) என்று மூதாதையரின் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்தவர் நம் தேவன். அன்பரே, நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளுக்கு மூதாதையர்கள். இந்த சொத்தை சுதந்திரித்துக்கொள்ள நீங்கள் அடிக்கடி உங்களை சோதித்து, அவரிடம் நெருங்கி வாழுங்கள்.

2. தகப்பன் தேவனோடு நடந்தது கிருபையே!

“நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்” (ஆதி 6:9)

நோவாவின் காலத்தில் பூமியிலே அக்கிரமம் பெருகி இருந்தது. தேவன் மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு விசனமாயிருந்தது. அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் தேவனோடு நடந்துகொண்டிருந்த ஒரு குடும்பம் நோவா குடும்பம்.

ஆபிரகாம் தேவனுக்கு நூற்றுக்கு நூறு கீழ்ப்படிந்து, தேவனை பிரியப்படுத்தினான். தேவன் அவனுடைய சந்ததியை ஆசீர்வதித்தார். யோசேப்பு வாலிபனாய் இருந்தபோதும் தேவனோடு நடந்தான் அதனால் போத்திபாரின் வீடு ஆசீர்வதிக்கப்பட்டது. எகிப்து தேசமும் ஆசீர்வதிக்கப்பட்டது. அன்பு தகப்பனாரே, நீங்கள் உங்கள் வாழ்க்கையை சற்று சீர் தூக்கிப் பார்க்கலாமா? நீங்கள் தேவனோடு நடந்தால் உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்படுமே! ‘மனைவிக்கு, கடைசி மூச்சு உள்ளவரைக்கும் உண்மையாக இருப்பேன்’ என்று தீர்மானியுங்கள்.

புகை பழக்கங்கள், லாகரீக வஸ்துக்கள், லாட்டரி சீட்டு சம்பாத்தியம், மதுபான வகைகள் அல்லது தகாத உறவுகளோ உங்கள் வாழ்வில் இருக்குமேயென்றால் உடனே களைந்து போடுங்கள்.

‘எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள்’ என்று நீங்கள் 10 காசுகூட வாங்கக் கூடாதே. “பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில்“…உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்…”- (2 இரா. 20:5)

மூன்றாம் நான்காம் தலைமுறையை மட்டும் விசாரிக்கிற வராயிருக்கிறேன்” (யாத் 20:5) என்று வசனம் சொல்லுகிறதே!

.....( தொடரும் )


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Advice for Young Couple 
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் 
HomeFamily  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact