1. உங்கள் கணவரே உங்கள் இல்லத்தின் தலைவர், நீங்கள் அல்ல என்பதை மறந்து விடாதிருங்கள்…!
2. கீழ்ப்படிவது அடிமைத்தனம் அல்ல. அது தேவனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியம்…!
3. உங்கள் கணவரை அவரது குறைவு நிறைவுகளோடு ஏற்றுக் கொள்ளுங்கள்…!
4. நீங்கள் ‘சொல்வதே சரி’ என்று சண்டை போடாதீர்கள். அவரோடு விவாதிப்பதை விட்டு விட்டு தேவனிடம் சொல்லுங்கள்…!
5. உங்கள் நாவை அடக்குங்கள். ஒரு முறை கொட்டிய வார்த்தைகளைத் திரும்ப பொறுக்க முடியாதே.. எனவே யோசித்துப் பேசுங்கள்…!
6. உங்கள் கணவரைப் பற்றி பெருமை கொள்ளுங்கள்.. மற்றவர்களுக்கு முன்பாக அவரைப் பாராட்டிப் பேசுங்கள்…!
7. முறுமுறுக்கும் மனைவியாகவோ, நச்சரிக்கும் மனைவியாகவோ இராதேயுங்கள்…!
8. உங்கள் கணவர் வேலையிலிருந்து திரும்பும் போது நேர்த்தியாக உடையணிந்திருங்கள்…!
9. குடும்பத்தின் சமாதானம் உங்கள் கையில் இருக்கிறது..ஞானமுள்ள பெண் எதை எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்திருக்கிறாள்…!
10. குடும்பத்தின் நிதி நிலைமையைப் புரிந்து செலவு செய்யுங்கள். டாம்பீகச் செலவுகளை அறவே நிறுத்துங்கள்…!
11. உங்கள் கணவரின் குற்றத்தை பிள்ளைகள் முன் சுட்டிக்காட்டாதிருங்கள்…!
12. உங்கள் கணவரின் பெற்றோரோடு சமாதானமாக இருங்கள். அவர்களோடு ஏற்படும் உரசல் உங்கள் கணவரால் மனோரீதியாக பாதிக்கும்…!