கேள்வி-பதில் பகுதி
கேள்வி
அன்புள்ள அங்கிள் எங்களுக்கு கல்யாணமாகி 10 வருடங்கள் ஆகின்றது. ஆனால் என் கணவர் கடந்த 1 வருடமாக தினமும் குடித்து விட்டுதான் வீட்டிற்கு வருகின்றார். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை. எதாவது வழி சொல்லுங்களேன்.
- சரோஜா, வியாசர்பட்டினகுன்றம்
பதில்
அன்பு மகள் சரோஜா
உங்களது உணர்வு பூர்வமான கடிதத்திற்கு நன்றி. தங்கள் வயதில் மகள், மருமகள் எனக்கு உண்டு.எனவே தங்களை மகள் என்று அழைப்பதில் மகிழ்ச்சி.
உங்கள் மணவாழ்வின் ஆரம்ப நாட்களை திரும்பிப் பாருங்கள். நிச்சயம் மகிழ்ச்சிகரமாகவே இருந்திருக்க வேண்டும் இல்லையா?. நல்லவொரு ஆரம்பம். நாட்கள் செல்ல செல்ல எப்படியோ குடிப்பழக்கத்திற்கு அடிமையானதைக் கேள்விப்பட்டு என் மனம் ஓர் தந்தை நிலையில் அதிக பாதிப்போடு இதை எழுதுகிறேன். "
1. "புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்" என்று வேத புத்தகத்தில் ஒரு மறக்க முடியாத குடும்ப சத்தியம் உண்டு. ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி, நிறைவு அனைத்திலும் கணவன், மனைவி இருவருக்கும் சம பங்கு இருப்பினும், பெண்களை தேவன் அன்புள்ளவர்களாக பொறுமை காப்பவர்களாக விட்டுகொடுப்பவர்களாக, தேவனுக்கு அடுத்த படி கணவனுக்காக பிள்ளைகளுக்காக தியாகத் திருவுருவமாக உருவாக்கியுள்ளார். இதை மனதில் வைத்து குடும்ப காரியங்கள் ஒவ்வொன்றையும் செயல்படுந்துங்கள்.
2. தங்கள் கணவர் எதனால் மதுவுக்கு அறிமுகபபடுத்தப்பட்டார் என்பதை நீங்களும் சொல்ல முடியாத சூழ்நிலையில் குடிப்பழக்கம் அவரைத் தொற்றிக் கொண்டிருக்கலாம். இது மனிதனின் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்தது. காரணங்கள் பற்பல. எது எப்படியிருப்பினும் உங்கள் கண்வருக்கு நீங்கள் தானே நெருக்கமானவர்.
3. வீடு வந்ததும் தங்களைச் சுற்றிச் சுற்றி வருவாரே என்றால் உங்கள் குடும்பம் வலுவடையப் போகிறது என்று பொருள். இல்லை, அவர் குடித்துவிட்டு இரவில் உறங்குவதற்கு மட்டிலும் வந்து ஒரு மூலையில் தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்கிறார் என்றால் உங்கள் பேச்சு, செய்முறைகள், அவரை நீங்கள் நடத்தும் விதம் போன்றன அவரைத் துக்கப்படுத்தியுள்ளது மாத்திரமல்ல, மனதளவில் காயப்படுத்தியும் இருக்கலாம் என்று யூகிக்க முடியும்.
4. முதலாவது நீங்கள் உங்களை திடப்படுத்திக் கொள்ளுங்கள். "என்னாலே என் குடும்பத்தை, என் கணவரை (அன்பினால்) கட்ட முடியும்" என்ற நம்பிக்கை உங்களுக்குள் வரவேண்டும்.
5. உங்கள் கணவரிடத்தில் ( எத்தனையோ) வேண்டாத, வெறுக்ககூடிய , ஒரு வேளை வெளியாரிடம் சொல்ல இயலாத குணங்கள் இந்த நாட்களில் காணப்படலாம். இருப்பினும் பல நற்பண்புகள் அவரிடம் இல்லாமல் இருக்க முடியாது. காரணம், அவரையும் உங்களையும் தேவன் தானே உருவாக்கினார். அப்படிப்பட்ட நற்பண்புகளை அன்றாட வெளிப்படையாக பாராட்டப் பழகிக் கொள்ள வேண்டும். இது அவரை பெரிய அளவில் மாற்றும்.
6. முக மலர்ச்சியுடன் அவர் விரும்புகிற உணவு வகைகளை சுவையோடு செய்து பரிமாறி அவரை சந்தோஷப்படுத்துங்கள். கணவன் வயிறார சாப்பிட்டாரென்றால் அவரது குறைகள் நம் மனக்கண்களுக்குத் தெரியாது.
7. இன்னொரு முக்கியமான தேவையை| கடமையை உங்கள் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். மதுப்பழக்கம் அவரிடத்தில் வந்ததற்கு ஒருவேளை உங்களுடன் தாம்பத்திய உறவுக்கு நெருங்கிய போது நீங்கள் ( தொடர்ந்து) மறுத்திருக்கலாம். இதையும் சற்று எண்ணிப் பாருங்கள். ஒரு மனைவியிடத்தில் ஒரு கணவன் நியாயமாக எதிர்பார்க்கும் உடலுறவு மறுக்கப்பட்டால், மனிதன் அதைத் தேடி வேறு எங்கேயோ செல்ல முயற்சிக்கிறான். இதைப் பல குடும்பங்களில் பார்த்து கண்ணீர் விடுகிறேன்.
8. திருமணத்தில் கிடைக்கப் பெற்ற உன்னத, உயரிய பரிசுத்த பரிசு கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாயிருகிற தாம்பத்திய உறவு. இது மறுக்கப்பட்டால் குடும்பங்கள் சிதைகின்றன. எந்தவொரு தம்பதி தேவைக்கு ஏற்ப நேரம் எடுத்து தாம்பத்திய உறவில் தங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறார்களோ அவர்களுக்கிடையே மலரும் நட்பும் பாசப் பிணைப்பும் ஆச்சரியகரமாக இருக்கும். இதை அடைய மனமாற்றமும் விட்டுக் கொடுத்தலும் அவசியாமே. உடல் ரீதியான, மன ரீதியான தடைகளைக் களைய அதற்குரிய மருத்துவர்களையும் அனுகலாம். அனைத்தையும் பேச்சு வார்த்தை மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது இருவருக்கும் குறுக்கேயிருந்த கசப்பானவைகள் அனைத்தும் இனிமையாக மாறும். அதுவே இல் + அறம். குடிக்காரக் கணவர் ஒரு பசுவைப் போல மாறுவது தின்னம்.
உறுதியாக நீங்கள் உங்கள் குடும்பத்தைக் கட்டுவீர்கள். தேவன் தம் ஆசீர்வாத கரங்களால் உதவிடுவார். வாழ்க்கை வாழ்க்கை வாழ்வதற்கே. இனிதே வாழ வாழ்த்துக்கள்.
முடியுமானால் Bible-ல் ( பழைய ஏற்பாடு) நீதிமொழிகள் புத்தகத்தைப் படியுங்கள் ( அதிகாரம் 31 : வசனங்கள் 10 முதல் 21 வரை )
அன்புடன்
உங்கள் அங்கிள்.
( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)
|