அன்பு என்ற பெயரை ஏன்தான் என் பெற்றோர்கள் எனக்கு வைத்தார்களோ தெரியவில்லை.. நான் ஓர் ஆசிரியை.. என் கணவர் முதல் மனைவியை இழந்தவர்.. என்னை தனது 33ஆம் வயதில் மறு மனைவியாக திருமணம் செய்தார்.. அன்பான கணவர்.. 7 ஆண்டுகளில் விதவை ஆகிவிட்டேன்.. 3 ஆண் பிள்ளைகள். ஒரு சிறிய சொந்த வீடு... 3 நிலங்கள்.. என் 3 பையன்களையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்.. என் பெற்றோரும் எனக்கு அதிகம் உதவினர்..
இன்று மூத்த மகன் இஞ்சினியர்.. அடுத்த பையன் எம்.எஸ்.சி.. பி.எட்.. கடைசி மகன் பி.ஏ. முடித்து சொந்த தொழில்..
மூன்று பையன்களும் கோயம்புத்தூரிலேயே வாழ்ந்து வருகின்றனர்..
என் மருமக்கள் என்னை அதிகம் நேசிப்பவர்கள் தான்..
ஆனால்..
இன்று யார் வீட்டிலும் என்னை கவனித்துக் கொள்ள யாருக்கும் இஷ்டமில்லை..
மொத்தத்தில் 5 பேரப் பிள்ளைகள்..
என் பேத்தியின் மகளையும் கண்டு விட்டேன்..
எனக்கு 2 ஓய்வூதியங்கள் (Pension).. என் கணவருடையதும் வருகின்றது. இயேசுவை நேசிக்கிற எனக்கு ஊழியப்பங்குகளும் உண்டு.. எனக்கு இருந்த 3 சிறிய நிலங்களையும் என் 3 பிள்ளைகளும் தங்கள் பெயரில் எழுதிக் கொண்டார்கள்..
குடியிருந்த சொந்த வீட்டையும் என் மூத்த பேத்தி என்னிடம் எப்படியோ மன்றாடி. அழுது. அடம் பிடித்து எழுதி வாங்கிக் கொண்டாள்..
இன்று...
என் 3 பையன்களும் என்னிடம் மாதத்திற்கு ஒரு தடவை கூட பேசுவதில்லை..
3 மருமக்களும் எதிராளி போல் என்னை எண்ணுகின்றனர்..
பேரப்பிள்ளைகள் 5 பேரும் "ஹலோ பாட்டிம்மா" என்று கூட சொல்லுவதில்லை..
என் சரீரத்திலே தீராத ஓர் வியாதி…
இப்பொழுது ஓர் தனி அறை வாடகைக்கு எடுத்துள்ளேன்.. சமையலுக்கு ஓர் ஆயா... ஆனால் என் வாழ்வோ ஓர் தீவு போல..
என் பிள்ளைகளோ. மருமக்களோ. பேரப்பிள்ளைகளோ யாரும் என்னோடு பேசுவது கிடையாது..
முதியோர் இல்லத்தில் சேரவும் எனக்கு இஷ்டமில்லை..
என் நேரம் எப்போது வருமோ?
நான் என்ன தப்பு செய்தேனோ எனக்குத் தெரியவில்லையே..
இத்தனிமையில் நான் அழிந்து போய்விடக்கூடாதே..
எனக்காக ஜெபிப்பீர்களா?
கண்ணீருடன். தனிமையில்
கே. அன்பு. கோவை.
பின்குறிப்பு : அன்பு நண்பர்களே தங்களின் வயதான பெற்றோரை அசட்டை பண்ணாதீர்கள்.. அது உங்களுக்கு ஆசீர்வாதம் அல்லவே.. குட்டிச் செல்லங்களைப்போல அவர்களைக் கவனியுங்கள்.. நேரம் கொடுங்கள்..
"அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே" (அப். 17:27)