‘உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில் ஆண்டவர் உயரமும் உன்னமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன் அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு சொட்டைகளால் பறந்து ஒருவரையொருவர் நோக்கி : சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டு சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. அப்பொழுது நான் ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்பு தழலை எடுத்து என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயை தொட்டு: இதோ இது உன் உதடுகளை தொட்டதினால் என் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தை கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும் என்றேன்.” ( ஏசாயா 6:1 - 8)
‘அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். (2 இராஜா 15:3) மேலும் உசியா எருசலேமிலே... கோபுரங்களைக் கட்டி அவைகளை பலப்படுத்தினான்50 (50. 2 நாளாக 26:10). அவனுக்கு அநேக ஆடுமாடுகள்.... வெள்ளாண்மை பிரியனாயிருந்தான் ( 2 நாளாக 26:6). அசரியா ஏலாதைக்கட்டி அதை திரும்ப யூதாவின் வசமாக்கிக் கொண்டான் ( 2 இராஜா 14:22). உசியா தன் மனம்மேட்டிமையாகி தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்... அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று (2 நாளாக 26: 16 - 21). ஏசாயா ஒரு நல்ல ராஜாவை, நண்பனை, தன் மேல் அக்கறையுடன் இருந்தவரை, தேவைகளை சந்தித்தவராக இருந்த இராஜாவை இழந்ததினால் இயற்கையாகவே மனசோர்வுடன் இருந்தார். இப்பொழுது தான் என்ன செய்வது என்ற கேள்வியுடன் காணப்பட்டார். இந்த சங்கடமான வேளையில் அவர் ஒரு தரிசனத்தை பெருகின்றார். அந்த தரிசனம் அவர் மீது மூன்று விதமான பரிமாணங்களை பிரதிபலிக்கின்ற வகையில் காணப்பட்டது. தரிசனத்தின் தாத்பரியமானது ஒரு நபரின் வாழ்கையை நோக்கத்திற்கு நேராக நடத்துவதாக இருக்கும். எப்பொழுதுமே உண்மையான தரிசனம் (அதென்டிக் விஷன்) தெய்வீக பரிமாணம் மற்றும் மனுக்குல பரிமாணமும் கொண்டதாக இருக்கும். உண்மையான தரிசனம் மேலிருந்தும் உள்ளிருந்தும் உண்டுபண்ணப்படும். ஏசாயாவின் வாழ்க்கையில் இது உண்மையாக இருந்தது.
1. .தேவனுடைய தரிசனம்
சமுதாயரீதியாக மற்றும் தனிப்பட்ட முறையில் குறைவுகள் ஏற்படும் நேரங்களில் அவர் தேவனிடமிருந்து தரிசனம் பெறுகின்றார். ஏசாயா பரிசுத்தமான தேவனுடைய கம்பீரத்தையும் மேன்மையையும் மாட்சிமையையும் நொடி நேரம் நோக்க முடிந்தது. சேராபீன்கள் தங்களுடைய முகத்தையும் கால்களையும் மூடிக்கொண்டு ஒருவரையொருவர் நோக்கி சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டு சொன்னார்கள்.
1.1. சாவாமையுடைய தேவன் உலகம் முழுவதிலும் ஆழுகை செய்கின்றார்.
நாட்டை எந்த அரசர் ஆளுகின்றார் என்பது பெரிய விஷயம் கிடையாது. தேவன் உயர்ந்தவராக இருகின்றார் மற்றும் இந்த உலகம் முழுவதையும் அவர் தன்னுடைய சர்வ வல்லமையுடன் ஆளுகை செய்கின்றார். இராஜாக்கள் வரலாம், போகலாம், அசைக்கமுடியாத இராஜியம் மற்றும் நித்தியமான இராஜா தேவன் ஒருவரே. ஏசாயா வாழ்க்கை குறித்தான நித்தியமான தொலைநோக்கு பார்வையை பெற்று இம்மைக்குரியவற்றை எல்லாம் விட்டு விலகி அதற்கும் அப்பாற்பட்டு பார்க்க தொடங்குகின்றார். எருசலேமின் ராஜாவை எல்லாம் தாண்டி பரலோகத்தின் ராஜாவுக்கு நேராக தன்னுடைய தரிசனத்தின் மீது நோக்கமாக (குறியாக) இருக்க ஏசாயா கற்றுக்கொள்கின்றார்.
1.2. தேவன் பரிசுத்தமானவர்
தேவனுடைய பரிசுத்த தன்மை ஆச்சரியமானது, ஆராதனைக்குரியது, அவருடைய படைப்புகளின் மூலம் வெளிப்பட கூடியது. ஏசாயாவுக்கு தேவனுடைய கம்பீரத்தையும் மேன்மையையும் மாட்சிமையையும் நொடி பொழுது காணும்படி தரிசனம் கொடுக்கப்பட்டது. பாவம் இல்லாத தேவ தூதர்களினால் கூட தேவனை காண முடியாமல் அவருடைய சன்னிதானத்தில் முகத்தை மூடிக்கொண்டிருகின்றார்கள். மனுக்குலமானது பாவம் நிறைந்து தகுதியற்றவர்களாக இருந்தோம் ஆனால் மனுக்குலத்தின் பாவத்திற்காக இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதினால் நாம் தேவனுடைய சன்னிதானத்திற்குள் செல்ல முடியும்.