அத்தியாயம் : 2
அழைப்பு
“தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத் தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக் கொண்டு வந்தார். இவன் அவர்களை தன் இருதயத்தின் உண்மையின் படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.” (சங்கீதம் 78:70-72).
இந்த வசனங்கள் கிறிஸ்தவ தலைமைத்துவத்திற்கு தேவையான மூன்று முக்கியமான கருத்துகளை வெளிக்கொண்டு வருகின்றது. அவைகள் அழைப்பு, குணாதிசயம் மற்றும் திறமை என்பவைகளே. தேவன் தாவீதை தேர்ந்தெடுத்து தேவனுடைய மக்களுக்கு மேய்ப்பனாக நியமித்தார். தலைமைத்துவத்திற்கான நிலைக்கு தேவன் மக்களை அழைக்கிறார் என்பதை இது தெளிவாக வெளிப்படுத்துகின்றது. இது மனிதனால் சாதிக்க கூடியது கிடையாது ஆனால் தேவனுடைய அன்பளிப்பு மற்றும் ஈவு. தாவீது தன்னுடைய ஜனங்களை “தன் இருதயத்தின் உண்மையின்படியே” நடத்தினான், இது அவனுடைய குணாதிசயத்தை குறித்து பேசுகின்றது. மேலும் தாவீது தன்னுடைய ஜனங்களை “தன் கைகளின் திறமையினால்” அவர்களை நடத்தினான், இது அவனுடைய திறமையைக் குறித்து பேசுகின்றது. இந்த மூன்று அம்சங்களில் எதாவது ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் அந்த தலைமைத்துவம் அழிவில் முடிந்துவிடும். இந்த அத்தியாயத்தில் முதல் அம்சமான “அழைப்பைக்” குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சிலநேரங்களில் “அழைப்பு” என்பது தர்க்கத்திற்கு இடமளிக்கின்றதாகவும் அதே சமயத்தில் தவறாக புரிந்துக்கொள்கின்ற பதமாக அமைகின்றது. எனவே தேவ வசனத்தின் மூலமாக இதை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
அழைப்பு என்பது முக்கியமானதா?
வேதாகமத்தில் பலதரப்பட்ட அழைப்பை குறித்து போதிக்கப்பட்டுள்ளது: முதலாவது, பூமியில் உள்ள எல்லா மக்களுக்கும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கான பொதுவான அழைப்பு. எனவே கிறிஸ்தவர்கள் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் சொல்கின்றார்கள். அதிக சுமையினால் பாரத்துடன் இருகின்ற அனைவரையும் கிறிஸ்து தன்னிடத்தில் இளைப்படையும்படி அழைகின்றார்.
பழைய ஏற்பாட்டில் தேவன் பசியோடும் தாகத்துடனும் இருக்கின்ற அனைவரையும் நிறப்பப்படவும் திருப்தியடையும் தம்மிடம் அழைகின்றார். “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆச்சாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்”(I பேதுரு 2:9) என்று பேதுரு இந்த அழைப்பை அழகான வாக்கியத்தில் அமைத்துள்ளார்.
இரண்டாவதாக, ஒரு நபர் கிறிஸ்துவிடம் வருகின்ற போது, அவருக்கு சாட்சியாக இருப்பதற்கான அழைப்பும் மற்றும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஊழியம் செய்வதற்கான பங்கும் பெறுகின்றார். தேவனாகிய இயேசு கிறிஸ்துவில் வெளிப்படையாக விசுவாசம் உள்ள அனைவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, அவருடைய வயது, பாலினம், பொருளாதார நிலை, சமூக நிலை அல்லது கல்வி தகுதிக் கருதப்படுவதில்லை. “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந்தமும் சாட்சிகளாக“ (அப் 1:8) இருப்பதற்காகவே கிறிஸ்தவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தரப்படுகின்றார்.
மூன்றாவது, உத்தியோகம் அல்லது தொழிலுக்கான அழைப்பு. தேவன் ஒவ்வொரு நபரையும் தன்னுடைய சொந்த சாயலிலும், சிறந்த தரத்துடனும், இயற்கையான பண்புடனும், இயல்பான ஆர்வத்துடனும் மற்றும் குறிப்பிட்ட தாளந்துடனும் சிருஷ்டித்துள்ளார். தேவனுடைய சித்தத்தின்படி ஒவ்வொருவரும் தொழிலை தேர்வு செய்ய வேண்டும். ஒரு நபர் தன்னை புரிந்துக்கொள்ள தொடங்கும் போது தன்னுடைய ஆர்வம் மற்றும் தாளந்தையும், வாழ்க்கைக்கான சரியான தொழிலையும் கண்டுபிடிகின்றான், ஒரு வேலை அது மருத்துவர், செவிலியர், ஆசிரியர், பேராசிரியர், வழக்கறிஞர், பொறியலாளர், ஓட்டுநர், விமான ஓட்டுநர், இயந்திர வல்லுநர், காய்ச்சியடித்து இணைப்பவர், பொருத்துகிறவர், சமையல்காரர், சிகை அலங்கரிப்பவர், செருப்பு தைப்பவர், தொழில் புரிபவர் ஃ வியாபாரி, சுமையாள், தபால்காரர், விற்பனையாளர், நடிகர் .... இன்றும் பல. உத்தியோக அழைப்பில் தேவன் தன்னுடைய சீஷரில் சிலரை திருச்சபையின் தலைமைத்துவ பங்கில் முழு நேர அடிப்படையில் அழைகின்றார். எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தேவனுடைய ராஜியத்தில் ஒரு பங்கு உள்ளது, ஆனால் சிலர் மாத்திரமே முழு நேர ஊழியம் செய்ய அழைக்கப்படுகின்றார்கள்.
“ஊழியத்திற்கான அழைப்பு மட்டுமே உயர்ந்த அழைப்பு அல்ல, ஆனால் அதைவிட முக்கியமான அழைப்பை தேவன் சிலருக்கு வடிவமைத்துள்ளார்.” தலைமைத்துவத்திற்கான இந்த அழைப்பானது குறிப்பிட்டதும் மற்றும் தனித்தன்மையானதாகும். இந்த அழைப்பு தனிப்பட்ட தெய்வீக உரிமையானதும் மற்றும் (மனிதனுடைய முயற்சிக்கும் சாமர்த்தியத்திற்கும் அப்பாற்பட்டது) மனிதனுடைய முயற்சி அல்லது சாமர்தியத்தினால் நிர்ணயிக்க முடியாதது.
திருச்சபையில் அல்லது ஊழியம் சார்ந்து தேவனுக்கு முழு நேரமாக சேவை செய்ய விரும்புகின்றவர்கள் ஊழியத்திற்காக தேவன் தன்னை அழைத்திருகின்றார் என்கிற தெளிவான உணர்த்துதலை பெற்றிருக்க வேண்டும். அனுபவம் அல்லது ஞானத்தை சார்ந்திருக்குமானால் அதை சரிபார்க்க வேண்டும். பேட்மேக் மில்லன் “எடுத்துக்காட்டாக ஒரு நபர் அழைப்பை உணர்த்தப்படுதல் அல்லது உள்ளான நடத்துதல் என்றும், ஒரு குறிப்பிட்ட திசையில் தேவன் திட்டமிடுகின்றார் என்று உணர்த்தபட்டு அதில் உறுதியாக இருப்பது என்றும் விளக்கலாம்” என்று எழுதுகின்றார். உள்ளூர் திருச்சபை என்கிற அமைப்பானது தலைமைத்துவத்திற்கான ஊழியத்தில் முழு நேர அழைப்பு உள்ளதா என்று பரிசோதித்து சம்மதம் தெரிவிக்க வேண்டும். உள்ளூர் திருச்சபை என்கிற சரீரமானது அழைப்பை அறிந்து அந்த நபரை ஊழியம் செய்யும்படி உற்சாகப்படுத்த வேண்டும். அந்தியோகியா திருச்சபையில் தேவன் பவுலும் பர்னபாவும் சுவிசேஷத்திற்கு விசேஷித்த ஊழியர்களாக இருப்பார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தினார். “தேவனால் அழைக்கப்பட்டு, அனுப்பப்படுவதே இயக்கத்தின் சாராம்சமாகும்.”
...(தொடரும்)