சாத்தான் உங்களை
வஞ்சித்து ஏமாற்றுகிறான்.
ஆனால்
இயேசு உங்களை
காப்பாற்றி இரட்சிக்கிறார்.
முதலாவதாக
நீங்கள் இரட்சிக்க ( காப்பாற்ற) பட வேண்டும்
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி இருக்கிறோம் - ரோமர் 3:25
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார். - ஏசாயா 53:6
ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் - யோவான் 3:3
இரண்டாவதாக
நீங்களே உங்களை இரட்சித்து(காப்பாற்றிக்) கொள்ள முடியாது
நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப் படுவதில்லையே - கலாத்தியர் 2
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான் - யாக்கோபு 2:10
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின் படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார் - தீத்து 3:5
மூன்றாவதாக
இயேசு உங்களை இரட்சிக்க முடியும்
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். - யோவான் 3:16
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். - I பேதுரு 2:24
நான்காவதாக
நீங்கள் இப்படி உங்களை இரட்சித்து கொள்ள முடியும்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் - அப்போஸ்தலர் 16:31
Thanks to Old Paths Tract Society Inc
இந்த இயேசு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் எங்களுக்கு எழுதுங்கள்.
தொடர்பு கொள்ள இங்கே கிளிக் (Click) செய்யவும்