மூன்றாம் நாள்
திரு.கிறிஸ்துதாஸ்
Reaching out people
நம் கைகள் செய்யத் தகாத காரியங்களை செய்த படியால் முகத்தில் பட்ட எச்சிலைக் கூட துடைக்கக்கூடாதபடி இயேசு நாதரின் இரண்டு கைகளும் ஆணிகளால் சிலுவையில் மாட்டப்பட்டது. கால்கள் செல்லக் கூடாத இடத்திற்கு சென்ற படியினால் கால்கள் இரண்டும் கூட ஆணிகளால் குத்தப்பட்டு சிலுவையில் மாட்டப்பட்டது. நம் சிந்தனையினால் செய்த பாவங்களுக்காக தலையில் முள்முடி சூட்டப்பட்டவராய், தன் கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் கல்வாரிச் சிலுவையில் சிந்தி தன் ஜீவனை விட்டார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. வேதவாக்கியப்படி மூன்றாம் நாள் ஜெயமாக உயிர்த்தெழுந்தார். இந்த உயிர்தெழுதலின் நற்செய்தியை முதன் முதலாக இங்கிலாந்து தேசத்திற்கு கொண்டு சென்றனர் நம் காதா நாயகர்களாகிய தீயோர் மத்தியில் நல்லோர் இருவர் ... விளக்கமாக கேட்க அருகில் உள்ள பட்டனை அழுத்தவும்.
திரு.கிறிஸ்துதாஸ். அவர்கள், "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் 'இசைவழி நற்செய்தியை.அளித்து வந்தவர். ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்லாமல், 'சிலுவையில் இயேசு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.