Deep Dive Image
HomeFamilyWalking With God PrayerDeep DiveSongsContact Info
தியத்தீரா சபை
Rev. N. Gnanaraja
This text will be replaced

கறைபடிந்த சபை (வெளி 2:18-29)

கர்த்தரால் இருதயம் திறக்கப்பட்ட லீதியாள் என்ற பெயருடைய இரத்தாம்பரம் விற்கிற பெண் தியத்தீரா ஊரைச் சார்ந்தவள். தியத்தீராவில் ஏராளமான வியாபாரிகளும், திறமையான கைவேலைக்காரர்களும் இருந்தனர். சபையிலே இருந்த விசுவாசிகளிலும் வியாபாரிகள் இருந்ததால் அவர்கள் அதிகமாக வேலை செய்தார்கள். அக்கினியில் வேலை செய்வதும், வெண்கல வேலைகள் செய்வதும் அவ்வூராருக்குப் பழக்கமானதால், தேவ குமாரன் விளங்கிக் கொள்ளும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அநேகக் காரியங்களில் ஈடுபட்ட இந்த சபையிலே கர்த்தர் குறைவைக் கண்டு அதை சுட்டிக்காட்டுகிறார்.
 
யேசபேல் தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டாலும், தன் கணவராகிய ஆகாபை கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்ய து}ண்டிவிட்டாள், (1 இராஜாக்கள் 21:25) அவள் ஏராளமான பில்லி சூனியங்களில், வேசித்தனங்களில் (II இராஜாக்கள் 9:22) ஈடுபட்டாள். அவள் கட்டில் கிடையாக்கப்பட்டது கடினத்தன்மையால் சம்பாதிக்கும் சபாத்தையும், உபத்திரவங்களையும் குறிக்கும்.
 
தியத்தீரா சபையிலே சாத்தானுக்குத் தங்களை விற்றுப்போட்ட பிசாசின் பிடிகளிலே இருந்த மக்களுமுண்டு. பாவங்களுக்கும், மீறுதலுக்கும், பிசாசின் அடிமைத்தனத்திற்கும் தங்களை விற்றுப்போடாத அதே சபையிலுள்ள மற்றவர்களுக்கு 25ம் வசனத்தில் கட்டளையாக நான் வருமளவும் பற்றிக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 26ம் வசனத்தில் வாக்குத்தத்தமாக ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுக்கிறார். ஆளுகை செய்யும் கிருபையை 27ம் வசனத்தில் தருகிறார். 28ல் விடிவெள்ளி நட்சத்திரம் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும். தியத்தீரா சபைக்கு மட்டுமல்ல, நம் சபைகளுக்கும் இயேசு போதுமே.


Rev. N. Gnanaraja Ex-General Secretary for Scripture Union, is a speaker and evangelist has been serving for more than four decades. He is also the founder of Seed Ministries International. He could be reached at ngnanaraja@gmail.com